
தமிழ் நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,895 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்ததோடு அதற்கான விண்ணப்பப்பதிவிற்கான இணையதளத்தையும்தொடங்கிவைத்தார்.கெளரவவிரிவுரையாளர்கள் பல்கலைக் கழக மான்யக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறிப்பிட்டுள்ள கல்வித்தகுதிபெற்றவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப பதிவை செய்யலாம்.கடைசி தேதி டிசம்பர் 29தேதி. பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டலவாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி பெற்றவர்கள் கெளரவ விரிவுரையாளர்களாகத்தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு கல்லூரிகளில் பணி அமர்த்தப்படுவர். மதிப்பூதியம் மாதம் 20,000 ரூபாய்.