Advertiment

சஞ்சீவி ராயர் கோவில்

by Admin

ஆன்மீகம்
சஞ்சீவி ராயர் கோவில்

இராமாயணப் போரில் மயங்கி விழுந்த லெக்ஷ்மணனைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையை கையில் தூக்கிக் கொண்டு பறந்து வந்தார். அப்படி வரும் வழியில் ஒரு கையில் இருந்த மலையை மற்றொரு கைக்கு மாற்றினாராம். அந்த இடம் தற்போது
சஞ்சீவி ராயர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஒருமுறை எச்சூர் தாத்தாச்சாரியார் என்னும் பிராமணர்பணி முடித்து பொற்காசுகளை மடியில் கட்டிக்கொண்டு தன் இல்லம் திரும்பிக் கொண்டு இருக்கும் வேளையில் வழிப் பறி கொள்ளைக்காரர்கள் இவரை விரட்டி வந்தனர்.

இவர்களிடமிருந்து தப்பிக்க இந்த சஞ்சீவி ராயர் கோவிலில் தஞ்சம் புகுந்தார். திருடர்களும் கோவிலுக்குள் நுழைய, இங்கிருந்த வானரங்கள் ஒற்றுகூடி அத் திருடர்களை விரட்டி அடித்தன. தன்னை காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாக 130 ஏக்கர் பரப்பளவில் இக் கோவிலுக்கு குளம் ஒன்றை வெட்டி விட்டார்.

அது முதல் இத்தலம் அய்யங்கார் குளம் என்று அழைக்கப்படுகிறது. மூவலர் சஞ்சீவி ராயர் என்னும் திருநாமத்தில் அனுமன் வடக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இத்தலத்தில் இராஜ கோபுரம் வடக்கு வாசலில் இருந்தாலும் பக்தர் தெற்கு வாசல் வழியே தான் வருகிற்றனர்.

இத்தல குளத்தில் இருந்து ஒரு கி.மீல் நடவாவிக் கிணறு ஒன்று 30அடி ஆழத்தில் உள்ளது. இங்குள்ள நீராழி மண்டபத்தில் உள்ள நீரை சித்ரா பௌர்ணமி அன்று வெளியேற்றி விடுவர். நீர் வெளியேறியதும் 12 கால் மண்டபம் நமக்குத் தெரியவரும்.  அன்று காஞ்சியில் இருந்து  காஞ்சி வரதரராஜ பெருமாள் இந்த நீராழி மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார். பின் அன்றிரவு அருகில் உள்ள பாலாறு ல் தீர்த்தவாரி முடித்து காஞ்சி திரும்புவார். இவ்விழா காண கண்கோடி வேண்டும்.

Share via