
பாபா படம் வெளியாகி உள்ளது.படத்தின் வெளியீட்டிற்கு முன்பு அனைத்து டிக்கெட்களும் விற்பனையாகிதீர்ந்து விட்டதாக தியேட்டர் உரிமையாளர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.படம் வெளியான பொழுது எதிர்பார்த்தவரவேற்பபை பெறாதநிலையில் புதிய தொழில் நுட்பத்தில் தற்பொழுது வெளியாவதின் மூலம் ரஜனியின் அந்தப்படத்தின்நோக்கம் பழைய ,புதிய ரசிகர்களுக்கு புரியும்.அதன் மூலம் படம் வெற்றி பெறும் என்கிற கருத்தும் வருகிறது.இந்நிலையில் பாபா படத்தின் தயாரிப்பாளர் பெரும் நஷ்டம் அடைந்திருந்தநிலையில் படம் மறு வெளியீட்டுத்தயாரானதருணத்தில் படத்தயாரிப்பாளர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரஜனி அவருக்கு ஒரு திருமண மண்டபத்தை வாங்கிக்கொடுத்துள்ளதாக தகவல் கோலிவுட்டில் பேசப்படுகிறது.எப்படியோ தனக்கு சம்பளம்கொடுத்த தயாரிப்பாளர் நலிந்த பொழுது அவரை கை தூக்கிவிட்ட சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.