Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஆனிமாத சங்கடஹர சதுர்த்தி

by Admin

ஆன்மீகம்
ஆனிமாத சங்கடஹர சதுர்த்தி

ஆனிமாத சங்கடஹர சதுர்த்தி
புதன் கிரக தோஷம் போக்கும் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்

ஆனி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

விநாயகர் வழிபாடு

ஆனி மாதத்தில் பவுர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாள் ஆனி தேய்பிறை சதுர்த்தி அல்லது மாத சங்கடஹர சதுர்த்தி தினம் எனப்படுகிறது. விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினமாக இந்த ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி கருதப்படுகிறது. இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சிறப்பான நன்மைகள் ஏற்படும்.

ஆனி தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே வழிபாடு செய்யலாம். மாலையில் வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு மாலை அணிவித்து நைவேத்தியம் செய்து படைத்து விநாயகருக்கு உகந்த ஸ்லோகங்களை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இரவு வானில் பிறையை பார்த்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஆனி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்து வாங்குவது போன்ற முயற்சிகளில் உள்ள தடைகள் நீங்கி, வெற்றி உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்கங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும். ஆனி மாதம் மிதுன ராசியில் பிறப்பதால் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு புதன் கிரக தோஷங்கள் நீங்கும்.

துன்பங்களை விரட்டி அடிக்கும் சங்கடஹர சதுர்த்தி மந்திரம்

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹ

பொது பொருள்:

பக்தர்கள் வேண்டிய வரத்தை நல்கும் சங்கடஹர கணபதியே தங்களை நமஸ்கரிக்கிறேன். முழு முதற் கடவுளாகவும், பூத கணங்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருப்பவரே. பக்தர்களை துன்பத்தில் இருந் து காத்து இன்பம் அளிப்பவரே. பக்தர்கர்களோடு எப்போதும் நிலைகொள்பவரே. பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு செயலை யும் வெற்றிகொள்ள செய்பவ ரே . பக்தர்களை சுற்றியுள்ள எதிர்மறையான வற்றை விலக் கி நன்மைக ளைத் தரும் நேர் மறை ஆற்றலை பெறுக செய்ப வரே உங்களை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.

Share via