Advertiment

.சீதா தேவியானவள் பூமாதேவியால் ஜனகருக்கு வரமாக வழங்கப்பட்டவள்.

by Admin

ஆன்மீகம்
.சீதா தேவியானவள் பூமாதேவியால் ஜனகருக்கு வரமாக வழங்கப்பட்டவள்.

அஸ்வமேத யக்ஞம் மங்களகரமான முடிவுக்கு வந்தது.அந்த நிகழ்வின் இறுதியில் சீதைக்கு தகுதியான வாழ்க்கைத்துணைவனைத்தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.சீதா தேவியானவள் பூமாதேவியால்ஜனகருக்கு வரமாக வழங்கப்பட்டவள்

.தெய்வீகம் பொருந்திய சீதைக்கேற்ற மணாளனைத்தேர்ந்தெடுப்பது சிரமாகவஇருந்தது.அதனால்,மன்னரிடம் அன்பளிப்பாக வந்த சிவ தனுசுவை யார் நாண் ஏற்றுகிறார்களோ அவர்களே மிதிலையின்
பொற்ச்செல்வி சீதையை மணக்க தகுதியுடையவன் என்று தீர்மானித்து,அதற்குரிய வேலைகளை முன்னெடுத்தார்,ஜனகர்.அதன்படி எல்லா நாட்டு இளவரசர்களும் யாகத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர்.

பலர் சீதையின் அழகில் கவர்ந்திழுக்கப்பட்டு னூவில்லை தூக்கிவே முடியாமல் தோல்விகண்டு வெளியேற...விஸ்வாமித்திரர் ஆலோசனைப்படிராமன் வில்லை வளைத்து நாண் ஒப்புக்கொண்டு ..வில்லெடுத்து நாண் ஏற்றி..இருகைகளினால் பற்றி அழுத்த ..வில்ஒடிந்தது. சபையில் நின்ற அனைவரும் ராமனின் பேராற்றல் கண்டு ஆரவாரம் செய்தனர்.ஜனகரோ எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தார்.அயோத்திக்கு ஆட்கள் செய்திகளைக் கொண்டு சென்றார்கள்

.ராமனுக்கும் சீதைக்கும்திருமணம் முடிப்பதற்கு ஏதுவாக தாங்கள் மிதிலைக்கு வரவேண்டுமென்று தசரத சக்கரவர்த்தி அழைக்கப்பட்டார்.
அயோத்தி முழுவதும்   ராமன் மணநாள் நிகழ்வுகள் கோலாகலமாகக்கொண்டாட்டங்கள் களைகட்டியது.உறவுகள் புடைசூழ மிதிலை நோக்கிய பயணம் ....மிதிலை வந்த  உற்றார் ,உறவுகள் முன்னிலையில் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது.

Share via