Advertiment

பிளஸ் 2 மதிப்பெண் வழங்க  10ம் வகுப்பு மதிப்பெண் வேண்டும் 

by Editor

கல்வி
பிளஸ் 2 மதிப்பெண் வழங்க  10ம் வகுப்பு மதிப்பெண் வேண்டும் 



+2 மாணவர்கள் 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணை சரிபார்த்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரியர்களுக்கும் தேர்வுத்துறை இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


 +2 மதிப்பெண் கணக்கீட்டுக்கு தேவைப்படுவதால், 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை கோரியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், '+2 மாணவர்கள், அவர்கள் 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை சரிபார்த்து இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.  ஜூன் 30ஆம் தேதிக்குள் மதிப்பெண் சான்றிதழுடன் www.dge.tn.gov.in என்ற தளத்தில் பதிவேற்ற வேண்டும். மேலும், மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநரிடமும் பட்டியலை வழங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via

More Stories