Advertiment

 விஜய் நடிக்கும் பீஸ்ட்

by Editor

சினிமா
 விஜய் நடிக்கும் பீஸ்ட்

 


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 65வது படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.


‘தளபதி 65’ என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டைட்டில் படத்தை வெளியிட்டுள்ளார்.  அதில் விஜய் நீளமான துப்பாக்கியுடன் ஸ்டைலாக காட்சியளிக்கிறார். விஜய் ரசிகர்கள் தற்போது இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் முதல்முறையாக விடிவி கணேஷ் இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்துள்ளார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளது.தற்போது விஜய் நடிக்கும் 65வது படத்தின் டைட்டில் வெளியானதையொட்டி ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Share via

More Stories