Advertiment

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி!

by Editor

சினிமா
 அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது யசோதா, சகுந்தலம், குஷி, அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என பட வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. இதுதவிர இந்தியில் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா, கடந்த சில மாதங்களாக அதிலிருந்து விலகியே இருந்தார். 

இந்நிலையில், "நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை பதிவிட்டு, தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் விவரித்துள்ளார். அதன்படி தான் myositis என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். விரைவில் இதிலிருந்து நலம்பெற்று திரும்பி வருவேன் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.

Share via

More Stories