
காமெடி நடிகர் சந்தானம் ஹீரோவாக தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படம் நவ.25இல் வெளியாகிறது.