Advertiment

தளபதி 67 படத்தில் நடிகர் கார்த்தி

by Staff

சினிமா
தளபதி 67 படத்தில் நடிகர் கார்த்தி

சர்தார் படத்தின் வெற்றியைத் கொண்டாடும் வகையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது 'கைதி 2' எப்பொழுது வரும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அடுத்த வருடம் படத்திற்கான பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக கார்த்தி தெரிவித்தார். மேலும் லோகேஷ் கனகராஜ் தன் முந்தைய படத்தின் கதாபாத்திரங்களை அடுத்த படத்திலும் தொடர்ச்சியாக கொண்டு வருகிறார். அதேபோல் 'தளபதி 67' படத்தில் நீங்கள் இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, "அது தெரியவில்லை. அது எளிதும் கிடையாது. நாம் ஆசைப்படலாம். இரண்டு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் வேறு. அது தயாரிப்பாளர்கள் கையில் தான் இருக்கிறது" என்றார்.
 

Share via

More Stories