Advertiment

தீபாவளிப்பண்டிகைக்கு திரையில் காண புதிய படங்கள் தயார்.

by Editor

சினிமா
தீபாவளிப்பண்டிகைக்கு திரையில் காண புதிய படங்கள் தயார்.

தீபாவளி திருநாள் வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் புது படங்களை மக்கள் குடும்பமாக சென்று பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். அதேசமயம் தற்போது பெரும்பாலானோர் ஓடிடிகளில் வெளியாகும் படங்களை காண்பதற்கு ஆவலோடு காத்திருப்பவர்களும் உண்டு. அந்த வகையில் இந்தாண்டு ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் ஷர்வானந்த், ரிது வர்மா, அமலா, ரமேஷ் சதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கணம்'. இப்படம் வரும் அக்டோபர் 20-ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும்.

பிரபல பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர், ஆலியாபட், அமித்தா பச்சன், நாகர்ஜூனா, ஷாருக்கான் நடித்துள்ள படம் 'பிரம்மாஸ்திரா'. இப்படம் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூல் சாதனை படைத்தது. இப்படத்தை அயன்முகர்ஜி இயக்கிய நிலையில் வரும் அக்டோபர் 23-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நடிகர் கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி, ஷீலா நடிப்பில் உருவாகியுள்ள தொடர் 'பேட்டைக்காளி'. இயக்குநர் ராஜ்குமார் இத்தொடரை இயக்கியுள்ள நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். ஜல்லிக்கட்டு காளைகளின் முக்கியத்துவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இத்தொடர் வரும் அக்டோபர் 21-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இயக்குநர் அன்னிஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கிருஷ்ணா விருந்தா விஹாரி. நடிகர்கள் நாகா சௌர்யா, ஷெர்லி நடித்துள்ள இத்திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் அக்டோபர் 23ம் தேதி வெளியாகிறது.

Share via

More Stories