Advertiment

20 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க ஆசை

by Staff

சினிமா
20 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க ஆசை

தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அறிமுகமாகி அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷிகன்னா. கார்த்தி ஜோடியாக சர்தார் படத்திலும் நடித்து முடித்துள்ளார். ராஷிகன்னா சினிமாவுக்கு வந்து 8 வருடங்கள் நிறைவானதையடுத்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். "நேரத்துக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பேன். பள்ளி, கல்லூரிகளில் நான் வெட்கப்படும் ரகம். கலாட்டா செய்யும் பெண் அல்ல. அமைதியாகவே இருப்பேன். கோபம் அரிதாக வரும். எனது கனவு கதாபாத்திரங்கள் நிறைய உள்ளன. ஆக்சன் படம் செய்ய வேண்டும். சினிமா வாழ்க்கை மிகவும் பிடித்துள்ளது. நான் நினைத்ததை எல்லாம் சாதிக்க இன்னும் இருபது ஆண்டுகள் சினிமா துறையில் நிலைத்திருக்க ஆசைப்படுகிறேன்" என சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Share via

More Stories