இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உதவி வருகின்றனர். இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலையில் பாதிப்புக்காக மக்களுக்கு நிதி திரட்டும் விதமாக செஸ் சாம்பியன் விஸ்வநாதனுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் செக்மோட் கோவிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் நிதி திரட்ட செஸ் போட்டியில் கலந்துகொண்டார்.
அதன் பின்னர் இருவருக்குமான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அமீர்கான் விஸ்வநாதன் ஆனந்திடம் உங்கள் பயோபிக்கில் நடிக்க ஆசை எனக் கூற அவருக்கு பதிலளித்த ஆனந்த் அப்படியென்றால் அதற்காக நீங்கள் உடை ஏற்ற வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கில் நடிக்க ஆசை - பிரபல நடிகர்!
by Admin 24-07-2021 10:35:42am
சினிமா