
1. உலகில் பொதுவாக எல்லோரும் இறக்கும் பொழுது முழுக்கு வெளியாகிவிடும் ! அதாவது மலமும் ! ஜலமும் வெளியே வந்துவிடும் ! இப்படி வெளியாவதே தீட்டு ! என்று கூறுவதுண்டு ! இந்த தீட்டின் காரணமாகத்தான் அந்த உடல் நாற்றம் வீசுகிறது ! (அதுவே பிண வாடை) !!
2. சித்தர்கள் ! ஞானிகள் ! ரிஷிமார்கள் ! சாதுக்கள் ! இறை பக்தி மார்க்கத்தில் சிறந்தவர்கள் ! போன்றோர் இறப்பது கிடையாது ! அவர்களுடைய உயிர் அவர்களின் தலையில் சென்று அடங்கி விடும் ! இப்படி அடக்கம் ஆகும் உடலுக்கு ! 10 அடையாளங்கள் இருக்கின்றன !!
1. அந்த உடல் கெட்ட நாற்றம் வீசாது ! தேவ மணம் வீசும் ! அந்த உடலில் முழுக்கு (தீட்டாகிய மலமும் ஜலமும்) வெளியாகாது !!
2. அந்த உடல் விரைப்பாகாது ! எவ்வளவு நேரம் ஆனாலும் ? வளைந்து கொடுக்கும் ! அதற்க்கு நாடி கட்டு ! கால் கட்டு இட தேவையில்லை !!
3. அந்த உடல் கணக்காது ! ஒரு பூ கூடையை தூக்கினார் போல லேசாக இருக்கும் !!
4. இந்த உடல் நேரம் ஆக ஆக அதில் வியர்வை கொட்டும் !!
5. உடல் குளிர்ந்து போகாமல் ? எப்பொழுதும் வெது வெதுவென்று அதன் சூடு மாறாமல் இருக்கும் !!
6. பொதுவாக பிணத்தின் தொண்டை அடைபட்டுவிடும் ! ஆனால் ? அடக்கமான உடலின் தொண்டையோ ? எவ்வளவு தண்ணீர் கொடுத்தாலும் ? அது தொண்டையின் வழியாக இறங்கும் !!
7. உயிர் உள்ள பொழுது ! எப்படி ஒரு உடலுக்கு சொடுக்கு எடுக்க முடியுமோ ? அது போல இந்த அடக்கமான உடலிலும் எடுக்கலாம் !!
8. உயிர் உள்ள பொழுது ! இந்த உடலில் இருந்த கூன் மேலும் பல கோளாறுகள் எல்லாம் அடக்கமானவுடன் அது நேராகிவிடும் ! பார்ப்பதற்கு இளமை தோற்றம் திரும்பிவிடும் ! 80 வயதில் அடக்கம் ஆகும் ஒரு உடல் ! அடக்கமானவுடன் அதன் தோற்றம் 40 வயது உடலை போல் ஆகிவிடும் !!
9. இறந்தவர்களின் உடலின் முகம் அரண்டு காணப்படும் ! அடக்கமனவர்களின் முகம் இள சிரிப்புடன் காணப்படும் ! "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள் ? நாம் தூங்கி கனவில் ஒரு கெட்ட கனவு கண்டு விழிக்கும் பொழுது ? நமது முகம் அரண்டு காணப்படும் ! இதே ஒரு நல்ல கனவு கண்டு விழித்தால் ? சிரிப்புடன் எழுவோம் ! இறந்த ஆன்மா நரகத்தை கண்டு அது அரண்டு விடுகின்றது ! அடக்கமாகும் ஒரு ஆன்மாவோ இறைவனை கண்டு ! அந்த எக்களிப்பில் சிரிக்கின்றது !!
10. அடக்கமாகும் உடல் ! எக்கோடி காலமானாலும் ? மண்ணில் மக்காது ! இறந்த உடலோ ? 6 மாதத்திற்குள் கிட்ட தட்ட சின்னா பின்னமாகிவிடும் ! பூமியை நாம் தாய் என்று கூறுவோம் ! ஒரு தாய் தன் மகனை தின்பதாக இருந்தால் இவன் எக்கேடு கெட்ட நிலைக்கு தள்ளபட்டால் இது நடக்கும் ? அடக்கமான சடலத்திற்கோ ? அந்த பூமி அது மக்காமல் பாதுகாக்கின்றது ! ஏனெனில் ? இவர்களோ வந்த கடமையை சரி வர செய்ததால் இந்த நிலை !!