Advertiment

நாளை முதல் திருப்பதி மலையில் வருடாந்திர கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம்.

by Editor

ஆன்மீகம்
நாளை முதல் திருப்பதி மலையில் வருடாந்திர  கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவங்கி ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரம்மோற்ச  பூர்வாங்க பூஜை ஆன அங்குரார்ப்பணம் இன்று மாலை திருப்பதி மலையில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ஏழுமலையானின் படைத்தளபதியான விஸ்வ சேனாதிபதி கோவிலில் இருந்து பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகள் வழியாக கோவில் பின்புறத்தில் உள்ள வசந்த மண்டபத்தை அடைந்தார்.அங்கு தேவஸ்தான அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் பாடி பிறகு புற்று மண்ணை சேகரித்து அதற்கு பூஜைகள் நடத்தினர்.

தொடர்ந்து  சேகரிக்கப்பட்ட புற்றுமண் அங்கிருந்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.
 பின்னர் கோவிலுக்குள் தேவஸ்தான அர்ச்சகர்கள் நவதானியங்களை புற்று மண்ணில் இட்டு முளைப்பாரியிட்டனர். முளைப்பாரி இடப்பட்ட விதைகள் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளதோ அந்த அளவிற்கு நாடு செழிப்படையும் என்பது ஐதீகத்துடன் கூடிய நம்பிக்கை ஆகும்.நாளை மாலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது.

Share via