Advertiment

பி.எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடங்குகிறது.

by Editor

கல்வி
பி.எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடங்குகிறது.

தமிழக உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட், மாணவர் சேர்க்கைக்கு, அரசின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்நிலையில் சில பல்கலைகளை தவிர, மற்றவற்றில் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால், தனியார் கல்லுாரிகளில், பி.எட்., சேர்க்கைக்கான முன்பதிவு பணிகள் துவங்கியுள்ளன. பி.எட் மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 2022ம் ஆண்டிற்கான பி.எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடங்குகிறது. http://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் இன்று முதல் அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், அக்டோபர் 6ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 12ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via

More Stories