Advertiment

ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளும் ஷிவானி!

by Others

சினிமா
ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளும் ஷிவானி!

 தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் பகல் நிலவு. இந்த சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதன் பின்னர் மீண்டும் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்தார். ஆனால் இந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஷிவானி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேரளத்து புடவையில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Share via