Advertiment

தெலுங்கு சினிமாவிலிருந்து விலகியது ஏன் அமலா பால் பரபரப்பு தகவல்

by Staff

சினிமா
தெலுங்கு சினிமாவிலிருந்து விலகியது ஏன் அமலா பால் பரபரப்பு தகவல்

சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமலாபால் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதில், "தெலுங்கு திரையுலகுக்கு நான் சென்ற போது, அங்கு கமர்ஷியல் படங்களே ஆட்சி செய்வதை அறிந்தேன். பாடல் மற்றும் காதல் காட்சிகளுக்கு மட்டுமே கதாநாயகிகளின் தேவை இருக்கிறது. மேலும் அவர்கள் எடுத்து வரும் திரைப்படங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தன.

எப்போதும் 2 கதாநாயகிகள், காதல் காட்சிகள், பாடல்கள் என எல்லாமே கவர்ச்சியாக இருந்தது. எனவே அந்த திரையுலகில் என்னை இணைத்து கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் தெலுங்கில் நான் மிகவும் குறைவான படங்களிலேயே நடித்தேன். தற்போது நீண்ட காலமாக தெலுங்கு சினிமாவை விட்டு விலகி இருக்கிறேன்"

Share via

More Stories