
தொலைதூர கல்வி நிறுவனம்,ஆன் வழியாக பெறப்பட்ட பட்டங்கள் நேரடியாக கல்லூரி, பல்கலைக்கழங்களில் படித்த பட்டங்களுக்கு இணையானது தான் என்று பல்ககை்கழக மான்யக்குழு தெரிவித்துள்ளது .கல்லூரியில் சென்று பயில்வதற்கு வாய்ப்பு இல்லாதவர்களும் பட்டப்படிப்பை பெறவேண்டும் என்கிற நோக்கத்தில் உருவானதுதான் தொலைநிலை-அஞ்சல் வழி கல்வி நிறுவனங்கள்.அஞ்சல் வழி பயின்றவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று படித்தவர்
களின் அறிவை பெற்றிருக்கமாட்டார்கள் என்கிற கருத்திற்கிணங்க வேலை வாய்ப்புகளில் தொலை நிலை,ஆன்லைன் படித்தவர்களை தேர்வு செய்வதில்லை.இந்த பிரச்சனை நீண்ட காலமாக கல்வியாளர் மத்தியில் இருந்து வந்தது. பல்கலைக்கழக மான்யக் குழுவின் இந்த அறிவிப்பால்,தொலைதூர,ஆன்லைன் படிப்பில் கல்லூரி சென்று படிக்கமுடியாதபொருளாதார பின் புலமில்லாதவர்களுக்கு இவ்அறிவிப்பு நல் வாய்பாக அமையும்.