Advertiment

இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதம்

by Admin

ஆன்மீகம்
 இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதம்

 
கடவுள் வழிபாட்டில், படைக்கப்படும் தளிகை எனப்படும் நிவேதனம் . புரதான கோயில்களில் சாமிக்கு  பிரசாத  நிவேதானம்  செய்ய எடுத்துச்செல்லப்படும் பொழுது  குடையும் தீபந்தமும் தளிகை மல்வாரி வாசித்துக்கொண்டும் நாதஸ்வரம்.மேளம்  இசைக்க வரும் காட்சி  பக்தி உணர்வு வழிந்தோடும் .கோவில்  முழுதும் பரவும்  ஞானச்சுடர் நம்மை ஆனந்த்தில் ஆழ்த்தும் ஆறு கால பூஜை களிலும்  ஆகம விதிப்படி பல்வேறு வகையான நிவேதானம்  செய்ய,நித்ய பூஜாசங்கிரகம் எனும் நூல்   எடுத்துரைக்கிறது . காரண ஆகமம் ,காமிக ஆகமம் வழி  சிவ  ஆலயங்களிலும்
வைகானஸ  ஆகமம்,பஞ்சராத்ர  ஆகமம் திருமால் கோவில்களில் படைக்கப்படும் நிவேதன தளிகை குறித்து சொல்கிறது.ஒவ்வொரு தேவாலங்களிலும் இறைவனுக்குப்படைக்கப்படும் நிவேதானங்கள்  தயார்  செய்வதற்கு மடப்பள்ளி எனும்சமைக்கும் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது .அன்னம் பிரம்மம்  என்று வேதங்கள் சொல்கின்றன .ஐப்பசி மாதங்களில்சிவ வழிபாட்டில்  வெண்சோறு  வைத்து  பூஜை செய்வது சிறப்பிற்குரியது . அதை அன்னாபிசேகம் என்று அழைப்பவர். ஆயிரம்  ஆண்டுக்கு  முன்பே  தஞ்சை பிரகதீஸ்வரர் ,கங்கை  கொண்ட சோழபுரங்களில்   அன்ன வழிபாடு செய்யப்பட்டதுதெரிய வருகிறது. இன்றைக்கும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில்  நூறு  மூட்டை அரிசி கொண்டு சாதம் வடித்து அன்ன வழிபாடு செய்யப்படுகிறது. உப்பு,மிளகு.நெய் கலந்த  சம்பா சாதம்  உச்சிகால  நிவேதானம் செய்யப்படுகிறது.

Share via