
.
கோகுலாஷ்டமி....கண்ணன் தன் தாய் மாமன் கம்சனை கொல்வதற்காக எட்டாவது குழந்தையாக.. பிறந்து விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக - வாசுதேவர்-- தேவகியின் மைந்தனாக மலர்ந்தவன். யசோதையால் வளர்க்கப்பட்ட பரமாத்மா பார்த்த சாரதியாக பாண்டவ போரில் அர்ஜினனுக்கு தேரோட்டியாக இருந்து ...கீதாவுபதேசம் செய்து உலக மக்களை ரட்சிக்க கீதை எனும் வேதத்தை அருளினான். அஷ்டமி திதியில் நல்ல செயல்கள் கூடாது
என்பதை மாற்றவே கோகுலத்தில் அஷ்டமியிலும் ராம அவதாரத்தில் நவமியிலும் ஜனித்து அந்நாள்களை நல்ல நாளாக்கி ..நாடும் மக்களும் கொண்டாடும் பொழுதாக்கியவன் .கண்ணன். கண்ணன் நம் வீட்டுப்பள்ளையாக வந்தால் சகல தீமைகளும் அழியும் .நன்மையே பிறக்கும் என்பதன் குறியீடா க அரிசி மாவில் அவன் பாதத் தடத்தை வீட்டு வாசலிலிருந்து பூஜை
அறை வரை பதிப்பது ஐதீகம் . வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி.. வெண்ணெய் ,நெய் .முறுக்கு ,சீடை,அதிரசம்,அவல் என கண்ணனுக்குப்பிடித்த பண்டங்களை வைத்துவழிபட்டால் அவன் நம் வீட்டில் வாசம் செய்து..நமக்கு எல்லா நன்மைகளையும் தருவான். கண்ணன் பிறந்த இந்த நாளில் ஒவ்வொரு வீடும் கோகுலமாக மாறும். துவாரகையில் ஆட்சிசெய்த கண்ணன் ஒவ்வொரு வீட்டிலும் நல்லாட்சி புரிவான்.