
013-ம் ஆண்டு மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த 'காளி' படத்தை இயக்கினார்.
அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் நாயகனாக காளிதாஸ் ஜெயராம், நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன் பணிபுரியவுள்ளார். இந்தப் படத்தினை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் மற்றும் சாகர் பென்டீலா ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், படப்பிடிப்பு தொடங்க படக்குழுவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.