
தமிழ்த் திரையுலகை வசூல் மூலம் திரும்பி பார்க்க வைத்த படம் விக்ரம் .தங்கள் படங்கள் தான் கோடிகளைக் குவிக்கும் என்று கூறிக் கொண்டிருந்தவர்களையும் குரல் வளையை பிடித்து..அதைவிட ..அதைவி ட.. பல மடங்குகள் பணத்த எம் படம் வாரிக் குவித்து க் கொண்டிருக்கிறதென்று நன்றி பாராட்டும் விதமாக நாயகன் செய்து கொண்டிருக்க ..உள்ளுர் தயாரிப்பு நிறுவனங்கள் நாம் ஏன் உலக அளவில் படமெடுக்கக்கூடாது.கூடி படம் எடுத்தால் கோடிகளைக் குவிக்கலாமென்று குரல் கொடுக்க...அறைக்குள் ஒலித்த ஆசைக்குரல் வருமான வரித்துறை காதில் விழ..காதுக்குள் புகுந்த எறும்பை உதற ..பிடறி சிலிர்த்து கர்ஜித்து எழுந்த யானையாக .. .தயாரிப்பாளர்கள் வீடுகளில் மூன்றுநாட்களாக கஜ யுத்தம் நடந்து வருகிறது.