Advertiment

தலைமுடி அடர்த்தியாக வளர

by Editor

லைப் ஸ்டைல்
தலைமுடி அடர்த்தியாக வளர

 தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால், மார்க்கெட்டில் கிடைக்கும் அத்தனை பொருட்களையும் பயன்படுத்திவிட்டேன் ஆனாலும் முடி அடர்த்தியாக வளரவில்லை. வெங்காயம், முட்டை, தேங்காய் எண்ணெய் போன்ற சமையலுக்குப் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் பன்படுத்திவிட்டேன். ஆனாலும் எந்தப் பயனும் இல்லை என்று சலித்துக் கொள்பவர்கள்தான் அதிகம்.
 
தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சத்து பற்றாக்குறை. தலைமுடி அதிகப்படியாக கொட்டுவதால் முடியின் அடர்த்தி தன்மை குறைகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண  உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது முக்கியம். கூந்தலின் வெளிப்புறத்தைப் பராமரிப்பதுபோல, உட்புற ஆரோக்கியத்தைப் பராமரிப்பதும் மிகவும் அவசியம்.

முருங்கைகீரைப் பொடி மற்றும் கருவேப்பிள்ளை பொடி சம அளவு எடுத்துக் கொண்டு இரண்டையும் நன்கு கலந்துகொள்ள வேண்டும். தினமும் இந்த கலவையை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு டம்ளர் மோர் குடிக்க வேண்டும். இவற்றை 6 மாதம் தொடர்ந்து செய்து வர தலைமுடி உதிர்வது நின்றுவிடும். தலைமுடி அடர்த்தியாக வளரும் என்று தெரிவித்துள்ளார்.

Share via