Advertiment

..ஒ.டி.டி எனும் புதிய தளத்திற்குள்வந்தவா்கள் விருதுகளை அள்ளினா்.

by Admin

சினிமா
..ஒ.டி.டி எனும் புதிய தளத்திற்குள்வந்தவா்கள் விருதுகளை அள்ளினா்.

2020-2021  கொரோனா  உச்சத்திலிருந்த  காலகட்டம்.  திரையரங்குகள், பொதுவெளிகளில் பொது மக்கள்கூடுவதற்கு தடை  விதிக்கப்பட்டிருந்தது. கொரோனாவிற்கு  முன்னர்  சூரரைப்போற்று போன்ற  படங்கள்  எடுக்கப்பட்டு திரையிடல் பணியின் பொழுது கொரோனா வந்ததால் ,படம் திரையரங்களில்  திரையிட  முடியாத நிலை  பிரபல நடிகர் நடித்த  படத்தை   நீண்ட நாள் வைத்திருந்தால்  பெரும் நஷ்டத்தை சந்திக்க  வேண்டிய  சூழலுக்கு   தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவர்  என்கிற நிலை வந்த போது பல தயாரிப்பு நிறுவனங்களை  ஒ.டி.டி நிறுவனங்கள் அணுகியது  ,அவர்கள்  கேட்டதொகையை  வழங்கியதோடு  ..ஒ.டி.டி எனும் புதிய தளத்திற்குள் செல்ல  தூண்டியது .வீட்டிற்குள் முடங்கிக்கிடந்தவர்களுக்கு பிரபல நடிகர்கள் நடித்த படங்களை குடும்பத்தோடு  பார்க்க  வழிவகுத்தது.

திரையரங்கைவிட செலவு மிச்சம் என்கிற கணக்கில் ஒ.டி.டி. தளங்களுக்கு  ஆண்டு சந்தாவை காட்டினர் .ஒ.டி.டியினர் பணத்தை வாரி குவித்தனர் .இப்பொழுது  யூ டியூப்பு ம் ஒ.டி.டியும் இல்லை என்றால் வாழக் கையில் சுவராஸ்யமே இருக்காது என்கிற நிலைக்கு வந்து விட்டனர்.இத்தருணத்தில்  வெளிவந்த படங்கள் தரமாகவுமிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு  திரையரங்கினரின் எதிர்ப்பையும்  மீறி வந்த படங்கள்தான்  இன்று விருதுகளை வாரி குவித்துக்கொண்டிருக்கின்றன . திரையரங்குகள் திறந்த பின்பு மக்களின் மனநிலையிலும்  மாற்றம் ஏற்பட்டு  ஒ.டி.டிதளங்கள்  கொஞ்சம்  பின்னடைவை சந்தித்து கொண்டிருப்பதாக  செய்தி..

Share via

More Stories