
கணவன்-மனைவி பிரச்சனையோ ,பிள்ளைகளுடனா ன குழப்பமோ கருத்து முரண்பாடோ தோன்றினா ல்,உங்கள் உடன்பிறந்த அல்லது மிகவும் அன்னியோன்யமா க இருக்கும் ரத்தம் சம்பந்த உறவுகளுடன் மட்டுமே ஆலோசனைகளையோ அல்லது கருத்து பரிமாற்றங்களையோ செய்யுங்கள் நண்பர்கள் என்றோ பக்கத்து வீட்டுக்காரர் என்றோ கருத்துக்களை சொல்ல அனுமதிக்காதீர்க ள்.அவர்களி ன் வருகையால் தேவையற்ற பிரச்சனைகள் தான் தோன்றுமே தவிர. .உங்களுக்கான பிரச்சனை அவர்கள் வழங்கிய ஆலோசனையால் தற்காலிகமாகத் தீர்ந்தாலும் நாளை வேறு ரூபத்தில் உங்களுக்கு பிரச்சனை முளைக்கும் .உங்கள் குடும்ப பிரச்சனையை நண்பர் என்று இல்லை பழக்கமானவர் என்று சொல்லிய செய்திகள்,தகவல்கள் அவர் வேறு ஒருவரிடம் சொல்ல மாட்டார் என்பது என்ன .. நிச்சயம். வீட்டுப் பிரச்சனை உங்களுக்கே தெரியாம ல் வீதியில் உலா வரும். அவரவருக்கென்று ஒரு சமூகம் இருக்கிறது.
குடும்ப பாரம்பரியமிருக்கிறது . அதனால் .பழக்கத்தை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்குள் எல்லோரையும்அனுமதிக்காதீர். அண்ணன்-தம்பி பிரச்சனை.,மாமன்-மச்சான் பிரச்சனை .,அக்கா. .தங்கை பிரச்சனை எதுவாக இருப்பினும் அது உங்கள் உறவுக்குளளே வைத்துக் கொள்ளுங்கள் ஊர் அறிய செய்யாதீர்கள்.உறவு பிறழ்ச்சிக்கு வழி
வகை செய்யாதீர்கள்.