
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகின்ற சமந்தா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சென்னை பல்லாவரம் பகுதியை பூர்வீகமாக கொண்ட நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
திருமணத்திற்குப் பின்னர் கூட நடிகை சமந்தா தொடர்ந்து தனது கெரியரில் சாதித்து வருகின்றார். மேலும், தற்போது வெப் சீரிஸ்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் படங்கள் மட்டுமின்றி சீரிஸ்களுக்கும் ஆர்வம் காட்டி வருகின்றார்.இந்த நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா ரசிகர்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது, தனது சினிமா, காதல், குடும்பம், செல்லப்பிராணிகள், உடற்பயிற்சி என்று பல்வேறு விஷயங்கள் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது ரசிகர் ஒருவர் மீம் குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, இந்த மீம்ஸ்கள் குறித்து கவலை கொண்டு நான் பல இரவுகளை தூங்காமல் கழித்தேன். ஆனால், இப்போதெல்லாம் அதை பார்த்தால் சிரிப்பு தான் வரும்." என்று தெரிவித்துள்ளார்.