Advertiment

இளையராஜா தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து- இயக்குனர் பாரதிராஜா

by Editor

சினிமா
இளையராஜா தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து- இயக்குனர் பாரதிராஜா

 இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சென்னையில் தற்போது நடைபெற்றுவரும் ”தி வாரியர்” திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்த இயக்குனர் பாரதிராஜா, இளையராஜா மாநிலங்களவையின்  நியமன எம்பியாக தேர்வானதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் ”என் நண்பன் இளையராஜாவோடு 50 வருடத்துக்கு மேலாக ஒன்றாகப் பயணித்து வருவதாகவும்,அவரது வளர்ச்சி நம்ப முடியாதது, இளையராஜா தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து, சினிமா கலைஞர்கள் எவ்வளவு கௌரவிக்கப்படுகிறார்கள். இன்னும் எத்தனை ஜன்மம் எடுத்தாலும் சினிமாக்காரனாக தான் பிறக்க வேண்டும்” என அவர் உணர்ச்சி வசப்பட கூறினார்.

Share via