Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

மாணவியர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம்

by Admin

கல்வி
 மாணவியர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம்

தமிழகத்தில் பட்ட படிப்பு பயிலும் மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து தெரிந்துகொள்ள  தமிழகஅரகட்டணமில்லாத்தொலைபேசியையும்இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழக அரசு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்."சான்றிதழ் படிப்பு, பட்டயம, பட்டம்,தொழிற்கல்வி ஆகிய படிப்புகளில்படிக்கும்மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த உதவித்தொகையை பெற அரசுப்பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை பியின்று அதன் பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளும் இந்த நிதி உதவித்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 8-10-12- வகுப்பு முடிந்த பிறகு முதல் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே திட்டம்பொருந்தும்.அதாவது ஐ.டி.ஐ,ஆசிரியர் பட்டய படிப்பு , பி.ஏ..பி.எஸ்.சி.பி.சி.ஏ கலை அறிவியல் படிப்பு கவின்கலைபடிப்பு, பி.இ. ,பி.டெக். ,எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.எஸ்.சி கால்நடை,பி.எஸ்சி.,நர்சிங் ஆகிய படிப்பு படிக்கும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். தொலை தூர கல்வி-திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.நடப்புகல்வியாண்டில் மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாமாண்டு சேர்ந்த பிறகு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்தொழில்-மருத்துவ படிப்புகளில் இறுதியாண்டு செல்லும் மாணவிகளும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் இளநிலை பயிலும் மாணவிகள் மட்டுமே பயன் அடைய முடியும்.கூடுதல் விபரம் பெற 14417 கட்டணமில்லாத்தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இணையதளம்வழியாக விண்ணப்பிக்க விரும்புவோர்  penkalvi, tn.gov.in  என்ற இணையத்தில் பதிவிடலாம்" என்று குறிப்பிப்பட்டுள்ளது

Share via

More Stories