
விஜய் சேதுபதி வில்லனாக நடித்த மாஸ்டர்,விக்ரம் படங்கள் எல்லாம் வசூலில் சாதனை புரிந்து வெற்றிகரமாகஒடி வருவதால் இப்பொழுது விஜய் சேதுபதியை வில்லனாக பாலிவுட்டிலும் நடிக்க அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.கமல்ஹாசன் நடித்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1996 வெளிவந்த இந்தியன் திரைப்படம் பெரும் வெற்றியைபெற்றது.இப்படத்தின் இரண்டாம் பகுதி படப்பிடிப்பு நடந்த நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.இந்நிலையில் கமலின் விக்ரம் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து இந்தியன் -2 மீண்டும் படப்பிடிப்புநடக்க இருக்கிறது.ஏற்கனவே முப்பது விழுக்காடு படப்பிட்ப்பு முடிந்துள்ளது.இப்படத்தில் இப்பொழுது வில்லனாகவிஜய் சேதுபதியை நடக்க வைக்கப்பேசி வருவதாக தகவல்.இதனிடையே ,கமல் நடிப்பில் வந்த தேவர்மகன்-2லும்விஜய் சேதுபதி கமலின் மகனாக நடிக்க உள்ளதாகவும் செய்திகள் கோலிவுட்டில் உலாவருகின்றன.