Advertiment

கொக்கி குமாரு வந்து 15 வருஷமாச்சி!

by Admin

சினிமா
கொக்கி குமாரு வந்து 15 வருஷமாச்சி!

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் 2006 ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. வெளியான நேரத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், ஆண்டுகள் செல்ல செல்ல இந்தப் படத்திற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. படத்தின் கதை உருவாக்கம், இசை, எடிட்டிங், கேமரா பணி என அனைத்தையும் தற்போது பலரும் வியந்து பாராட்டுகிறார்கள். தனுஷின் கொக்கி குமார் கதாபாத்திரத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவான நிலையில், தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதை கொண்டாடி வருகிறார்கள். 

புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் செல்வராகவனுக்கு ரசிகர்கள் தொடர்ந்து அன்பு வேண்டுகோள் வைத்து வருகின்றனர். செல்வராகவனும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்

Share via