Advertiment

திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்ப OTT நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது

by Admin

சினிமா
திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்ப OTT நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது


இதுவரை ஒரு திருமண நிகழ்வை படமெடுத்து..வெளியிட..ஒரு நிறுவனமும் முயன்றதில்லை.முதல் முறையாக நட்சத்திர ஜோடிகளான விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்தை ரசிகர்கள் நேரடிக்காட்சியாக காண, ott  நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது. கிரிகெட், கோவில் கும்பாபிஷேகம்,அரசியல் மாநாடுகளைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் .ஆனால்,தனிநபர் திருமண நிகழ்ச்சிக்கு கோடிகளைக்கொடுத்து  ஒளிபரப்பஉரிமை பெறப்பட்டுள்ளதாகத் தகவல்.வரும் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் ,நட்சத்திர விடுதியில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.தமிழ்,தெலுங்கு.மலையாளம் உள்ளிட்ட திரைப்பிரபலங்களை அழைத்துள்ளதோடு,தமிழக முதலமைச்சர் ,அமைச்சர்கள்,முன்னாள் அமைச்சர்கள்  முக்கிய பிரபலங்களும் அழைக்கப்பட்டிருப்பதால்,திருமண நிகழ்வை காண நயன்தாரா ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.பிரபலமாகி விட்டால் தும்மினால் கூட துட்டுதான்என்று கோடம்பாக்கம் கூவிகொண்டிருக்கிறது.

Share via