சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தொலைத் தொடர்பு கல்வியில் பயின்ற மாணவர்கள் பெற்ற பட்டங்கள் செல்லாது என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.சம்பந்தபட்ட பல்கலைக்கழகத்தை தமிழக ஆளுனர்,உயர்கல்வித்துறை செயலாளர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்று பல்கலைக்கழக மான்யக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. தொலைக்கல்வி இயக்கத்திற்கு இயக்குனர் நியமிகப்படாமல் செயல்பட்டது.போதிய ஆசியர்கள் நியமிக்கப்படாமல் வகுப்பு நடத்தப்பட்ட போன்ற காரணங்களுக்காக இம்முடிவை அறிவித்துள்ளது.யு.ஜி.சி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைநிலைப் படிப்பிற்கும் அனுமதி வழங்கவிலலை என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தொலைத் தொடர்பு கல்வியில் பெற்ற பட்டங்கள் செல்லாது
by Admin 31-05-2022 11:25:54pm
கல்வி