
அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்.அதில்,அண்ணாபல்கலைக்கழத்தின் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் பெற ரூ300 கட்டணம் இருந்த நிலையில்தற்பொழுது ரூ3000 செலுத்த வேண்டும் என்று பல்கலைக்கழகம் அறிவித்திருப்பது மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தையே கட்டமுடியாமல் சிரமப்படும் பெற்றோர்களுக்கு இது மேலும் சுமையை அதிகரிக்க செய்யும் .ஆகவே,பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ள சான்றிதழ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.