
சிவகார்த்திகேயனின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பலரும் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து அரசாங்கமும், திரை பிரபலங்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் கொரோனா குறித்து விழிப்புணர்வை அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.