Advertiment

இன்ஜினியரிங் படிப்புகளில் புதிய பிஜி படிப்புகள் ஆரம்பம்

by Editor

கல்வி
இன்ஜினியரிங் படிப்புகளில்  புதிய பிஜி படிப்புகள் ஆரம்பம்

AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல புதிய பிஜி படிப்புகள் தொடக்கம்.இந்திய பொறியியல் பணியாளர்கள் கல்லூரி அறிவிப்பு. இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் இந்தியா இன் ஒரு அங்கமான இன்ஜினியரிங் ஸ்டாஃப் காலேஜ் ஆப் இந்தியா, ஏ.ஐ.சி.டி.இ அங்கீகரித்த பல புதிய பி.ஜி படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் சிவில், பவர், டெலிகாம், போக்குவரத்து, நிதி, எச்.ஆர்.எம், மார்க்கெட்டிங், பிசினஸ் அனலிட்டிக்ஸ் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஏ.ஐ.சி.டி.இ ஆல் அங்கீகரிக்கப்பட்ட 2 ஆண்டு முழுநேர பிஜிடிஎம் படிப்புகளை தொடங்கியுள்ளது. அதில்vபிஜிடிஎம் உள்கட்டமைப்பு, பிஜிடிஎம் ஜெனரல் மேனஜ்மென்ட், பிஜிடிஎம் இன்டஸ்ட்ரியல் சேப்டி, என்விரான்மென்ட் மேனஜ்மென்ட் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் மேலாண்மை, தொழில் தேவை மற்றும் சர்வதேச தரநிலைகள் ஆகியவற்றின் சமீபத்திய கருத்துக்களில் மாணவர்கள் உலகளாவிய திறன்களைப் பெறவும் 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதற்கும் இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

Share via

More Stories