Advertiment

காத்துவாக்குல ரெண்டு காதல் இன்று வெளியீடு

by Editor

சினிமா
காத்துவாக்குல ரெண்டு காதல் இன்று வெளியீடு

தமிழகம் மட்டுமின்றி உலகமெங்குமுள்ள திரையரங்கங்களில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவின் கூட்டணியில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று வெளியாகிறது.இந்தப்படம்  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து '7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் நகைச்சுவை கலந்த ஒரு காதல் படமாக உருவாகியுள்ள, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் இன்று உலகம் முழுவதும்வெளியாகிறது.காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவின் கூட்டணியில் உருவாகியுள்ள  இரண்டாவது படமாகும்.

Share via

More Stories