
நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் கோமாளி. இப்படத்தில் ஜெயம் ரவியை காதலிக்கும் பெண்ணாக பள்ளி மாணவியாகவும் நடித்திருப்பார் நடிகை சம்யுக்தா ஹெக்டே.கோமாளி படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே, ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கில் வீட்டிலேயே இருக்கும் சம்யுக்தா தனது சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்டீவாக இருந்து வருபவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்யுக்தாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. என் பெற்றோர்கள் தான் எனக்கு உலகம் அவர்களுக்காக பிரார்த்தியுங்கள் என்று உருக்மான வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதோடு பெற்றோர்கள் முதியவர்கள் என்பதால் அவர்களை மருத்துவமனையில் சேர்க்காமல் டாக்டர்களின் ஆலோசனையின்படி வீட்டிலேயே அவர்களை தனிப்படுத்தி வைத்து கவனித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை சம்யுக்தா ஹெக்டே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். பெற்றோர்கள் குணமாகி வரும் நிலையில் சம்யுக்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.