Advertiment

தனுஷின் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் இந்திய நடிகை!

by Admin

சினிமா
தனுஷின் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் இந்திய நடிகை!

நடிகர் தனுஷ் ஏற்கனவே ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தி கிரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இப்படத்தை இயக்குகிறார்கள். இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தி கிரே மேன் படத்தில் தனுஷ் தவிர மற்றுமொரு இந்திய நட்சத்திரமும் நடிக்கிறாராம். அவர் பெயர் ஐஸ்வர்யா சோனார். மராட்டிய நடிகையான இவர் ‘தி கிரே மேன்’ படத்திற்காக ஆடிசன் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்தப்படத்திற்காக சுமார் ஆறு மாதங்களாக நடைபெற்ற நடிப்பு பயிற்சியிலும் ஐஸ்வர்யா சோனார் கலந்துகொண்டாராம்.
 

Share via