
நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்கவுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் பாலாவுடன் இணைந்து சூர்யா 41 படத்தில் நடிக்கவிருக்கிறார்.
சூர்யாவே தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தினை முடித்தப்பிறகு சூர்யா வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறனும் நகைச்சுவை நடிகர் சூரியை ஹீரோவாக அறிமுகப்படுத்தி விடுதலை படத்தை இயக்கி முடித்துவிட்டு தற்போது, ‘வாடிவாசல்’ படத்திற்கான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஜூலையில் ’வாடிவாசல்’ படப்பிடிப்பை ஆரம்பித்து, வரும் ஜனவரி பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடக்கும் சமயத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.