
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜீன்,23.2019 ல் நடந்தது .போட்டியிட்ட இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் வாக்கு எண்ணிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.இந்நிலையில் மூன்று ஆண்டுகள் நெருங்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதி மன்றம அனுமதி அளித்தது.அதன் தொடர்ச்சியாக தனியார் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குகளை மார்ச் 20ம்தேதி நுங்கம்பாக்கத்திலுள்ள குட் செப்பர்ட் பள்ளியில்வைத்து வாக்கு எண்ணிக்கை நடத்திட உயர்நீதிமன்ற முன்னால் நீதிபதி பத்பநாபன் தலைமையில் நடத்திட அனுமதி வழங்கி உத்தரவிட்டது.