Advertiment

நடிகை பூர்ணா வில்லியா! எப்ப நடந்தது!

by Admin

சினிமா
நடிகை பூர்ணா வில்லியா! எப்ப நடந்தது!

நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் போன்ற படங்களில் நடித்த அவர், தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் திரிஷ்யம்-2 ரீமேக்கில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பவர் பிளே என்னும் படத்தில் பூர்ணா வில்லியாக நடித்துள்ளார். பணம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையில் அதிகாரம் எப்படி விளையாடுகிறது என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தை விஜயகுமார் கொண்டா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் சில படங்களை இயக்கி இருக்கிறார். இதில் கதாநாயகனாக ராஜ் தருண் நடித்துள்ளார். கோட்டா சீனிவாச ராவ் வில்லத்தனத்தில் பூர்ணாவுடன் போட்டி போட்டு நடித்துள்ளனர். மற்றும் ஹேமா லிங்கலே, பிரின்ஸ், அஜய், சத்யம் ராஜேஷ், பூஜா ராமச்சந்திரன், ராஜா ரவீந்திரா, கேதார் சங்கர், ரவிவர்மா, தன்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். அமேசானில் தெலுங்கிலும் இந்தியிலும் வெளிவந்த இப்படம் இப்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. 

Share via