
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' பதிவு 28 துவங்கியது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அமைப்பாக உள்ள, கேந்திரிய வித்யாலயா சங்கதன் சார்பில், கே.வி., பள்ளிகள் நடத்தப்படுகின்றன.முன்னுரிமைஇவற்றில், ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினரின் குழந்தைகளுக்கு, மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வரும், 2022 - 2023ம் கல்வி ஆண்டுக்கான ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, https://kvsonlineadmission.kvs.gov.in/index.html என்ற இணையதளத்தில் (28.02.2022) காலை, 10.00 மணிக்கு துவங்கியது.
குறைந்த பட்சம் ஆறு வயதாகியிருக்க வேண்டும்; அதிகபட்சம் எட்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் சேர்க்கை வழங்கப்படும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய கல்வி கொள்கையின்படி, வரும் கல்வியாண்டு முதல் இந்த வயது வரம்பு உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. இரண்டாம் வகுப்புக்கும், இந்த ஆண்டு ஆறு வயது நிறைந்த மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
1-ம் வகுப்பு சேர்க்கைக்கான ஆவணங்கள்.
1. குழந்தையின் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம்
2. பிறப்பு சான்றிதழ்
3. இருப்பிட சான்றிதழ்
4. அரசு வழங்கிய EWS சான்றிதழ்
5. வகுப்பு சான்றிதழ்
6. PwD சான்றிதழ்
7. ஓய்வுபெற்ற ராணுவத்தினரின் ஆவணங்கள்
மாணவர் சேர்க்கைப் பட்டியல் மூன்று கட்டங்களாக மார்ச் 25, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 8 ஆகிய தினங்களில் வெளியிடப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
1. kvsonlineadmission.kvs.gov.in என்ற இணைய தளத்திற்கு செல்லுங்கள்.
2. லாக் இன் செய்யுங்கள்.
3. கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்யுங்கள்
4. தேவையான ஆவணங்களை பதிவேற்றுங்கள்
5. எல்லாம் சரிபார்த்த பின்னர் Submit பட்டனை க்ளிக் செய்யங்கள்
6. பின்னாள் தேவைக்காக நீங்கள் அளித்த படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கூடுதல் விபரங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை kvsangathan.nic.in/ என்ற இணையதளத்திலும், ஆன்லைன் பதிவு விபரங்களை, kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.