Advertiment

இன்று இரவு சிவராத்திரி

by Admin

ஆன்மீகம்
இன்று இரவு சிவராத்திரி


இன்று இரவு சிவராத்திரி .தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.பக்தர் இரவு முழுதும் கண் விழித்திருந்து சிவனை வழிபாடுசெய்வர்.இதனைக்கருத்தில்
 ,கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று அதிகமிருந்ததால் ,கோயிலகள் பக்தர்கள்
 .ஆனால்,இந்தாண்டு மூன்றாம் கொரோனா அலையை மத்திய-மாநில  திறமையாகச்செயல்பட்டு கட்டுப்படுத்தியது.அதன்காரணமாக வழிபாட்டுத்தலங்கள் படிப்படியாகத் திறக்கப்பட்டன.இந்நிலையில்,இந்தாண்டு இந்து அறநிலையத்துறை பக்தர்களின் இறையுணர்வைமேம்படுத்தும் நிலையில் ,அனைத்து சிவாலயங்களிலும்இரவு முழுதும்சிறப்பு நிகழ்ச்சிநடத்தஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.இது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர்வெளியிட்ட அறிக்கையில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமயஅறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிவாலயங்களில்,மகாசிவாத்திரிவிழா,சிவபெருமானின் பெருமையை பறைசாற்றும் விதமாக அந்தந்த கோவில்களில் கடைபிடிக்கப்பட்டுவரும் ஆகம விதிகளுக்கு உட்பட்டுநடைபெற்று வருகிறது.

தற்பொழுது வருகிற 1-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறவுள்ள மகாசிவராத்திரி திருவிழா சிறப்பாக மற்றும் வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.அனைத்து சிவாலயங்களிலும் 1ந்தேதி மாலை முதல் மறுநாள்2-ந்தேதிவரை மகாசிவராத்திரி திருவிழா நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு ஆடல் வல்லான சிவபெருமானின் அருளாற்றலையும்,பெருமையையும் பறைசாற்றும் வகையிலும்,சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படி நமது பாரம்பரியகலை,கலாச்சார மற்றும் ஆன்மீக,சமய நிகழ்ச்சிகளை நடத்தகோவில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மகாசிவராத்திரி கொண்டாடப்படும் கோவில்களில் குறிப்பாக மின் அலங்காரங்கள் உரியபாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செய்ய வேண்டும்.பக்தர்கள்சிரமமின்றிதரிசனம் செய்யும் வகையில்உரிய வரிசைத்தடுப்பு வசதிகள்,காவல்துறை பாதுகாப்பு,மருத்துவ முகாம்கள்,கழிவறை மற்றும் சுகாதாரவசதி,குடிநீர்வசதி,வாகன நிறுத்துமிடம்,தேவையான இடங்களில் தீயணைப்புதுறை வாகன நிறுத்தம் ஆகியவை ஏற்பாடுகள் செயஅறிவுறுத்தப்பட்டுள்ளன. மகாசிவராத்திரி விழாவில் மங்கள இசை ,நாட்டிய நாடகம், பரதநாட்டியம்,வில்லிசை,கிராமிய   பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளை தொகுத்து ஒவ்வொரு ஒருகுறிப்பிட்டகால அளவு நிர்ணயம் செய்து மகாசிவராத்திரி இரவு முழுதும் பக்தர்களூம்,சேவார்த்திகளும் கண்டுபயன்பெறும் வகையில் ஏற்பாடுகள்செய்யப்படஉள்ளது.சிவராத்திரி நிகழ்ச்சிகள்அனைத்தும் கொரோனா  குறித்துஅரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி .எந்த ஆண்டும் இல்லாதஅளவிற்கு இந்தாண்டு சிவராத்திரி திருவிழா அனைத்து சிவாலயங்களிலும் மிகவும் சிறப்பாக நடைபெறும்.இதற்கு பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து சிவனருள் பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளார்..

Share via