Advertiment

லிங்கேஷ் ஜோடியாக காயத்ரி!

by Admin

சினிமா
லிங்கேஷ் ஜோடியாக  காயத்ரி!

தமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சீதக்காதி, புரியாத புதிர் படங்களில் நடித்தவர் காயத்ரி. இவர் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை அடுத்து காயல் என்னும் படத்தில் காயத்ரி நடித்திருக்கிறார்.

இதில் பரியேறும் பெருமாள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கேஷ்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் ஐசக் வர்கீஸ், ஸ்வாகதா, ரமேஷ்திலக், பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரித்திருக்கும் இப்படத்தை தமயந்தி இயக்கி இருக்கிறார். விரைவில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது.

Share via