
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின், உரிமையாளர் ராம நாராயணனின், மகனும் தேனாண்டாள் நிறுவனத்தின் சார்பில் தற்போது படங்களை தயாரித்து வரும், தயாரிப்பாளர் முரளி, மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை தயாரித்து இருந்தார். இதைத்தொடர்ந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு பின், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் படத்தை தயாரித்து வருகின்றனர். தேனாண்டாள் முரளி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ளார்.