
மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கு(2021-2022) வகுப்புகள் 14.02.2022திங்கள் கிழமை முதல் தொடங்க இருப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு காலதாமதமானதாகவும் தெரிவித்துள்ளது.இது குறித்துதமிழ்நாடு மருத்துவ இயக்குநரக குறிப்பில்,தேசிய மருத்துவ கமிஷன் வழிகாட்டுதல்படி2021-2022 ஆம் ஆண்டில்மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 14 ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும்.கொரோனர தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான நடத்தைகள் பின் பற்ற வேண்டும்.உணவுகூடங்களில் 50 விழுக்காடு
மட்டும் உணவு உண்ண அனுமதித்தல்வேண்டும்.நூலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் சுகாதார இயக்கநரகஅனுமதி விழா,கூட்டம் நடத்தக்கூடாது.அரசுபள்ளி மாணவர்களுக்கான 7.5சுதவீத இடம் பெற்றமாணவர்களிடம்கல்விகட்டணம்,சிறப்புக்கட்டணம்,தேர்வுகட்டணம்,உணவு-விடுதிகட்டணம்
,புத்தகம்,வெள்ளை அங்கி,ஸ்டெதஸ்கோப்,பல்கலைக்கழக கட்டணம் உள்ளிட்ட எந்தவித கட்டணமும் .கடந்த ஆண்டு பின் பற்றியஅதே நடைமுறை தொடரும்.7.5சதவீத ஒதுக்கீட்டில் சேரும்
கல்வி உதவித்தொகைக்கும் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் அவ்வறிக்கையில்குறிப்பிட்டுள்ளது.