
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற தொடர் குக்வித் கோமாளி.இத்தொடர் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் புகழ்.பெயருக்கேற்றவாறு இவரின் புகழும் வளர்ந்தது.பழைய சிரிப்பு நடிகர் சுருளி ராஜன் போல முடியும் அவ்வப்போது பேசிய காமெடி,கலாட்டாவை ரசிகர்கள்வெகுவாக ரசித்ததன் தொடர்ச்சியாக இரண்டாவதுசீசனிலும் இடம் பெற்றார்.இவரோடு குக்வித் கோமாஸியில் நடித்தஅஸ்வின் என்ன சொல்லப்போகிறாய் படத்தில் கதாநாயகனாக நடிக்க இவர் காமெடி நடிகராய் அறிமுகமானார். படம் எதிர்பார்த்த மாதிரி போகாவிட்டாலும் புகழுக்கு அடுத்தடுத்து படங்கள். முன்னணி இயக்குனர் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில்,அவர் தாம் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தான் என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் இணையத்தில் ரக்கை கட்டி பறக்கிறது.அவரைவிரும்பும் ரசிகர் எப்பொழுது கல்யாணம் என்று கேடக அரம்பித்து விட்டனர்.