
இயற்கை மருத்துவத்தின் மகத்துவம்
மஞ்சள்-
சடா மஞ்சளை நல்லெண்ணைய்,விளக்கெண்ணைய்,தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி தலை முழுகி
வந்தால் தலை முடி வளரும். மஞ்சள் தேய்த்து குளிப்பதை அநாகரீகமாக கருதாதீர்கள்.மஞ்சள் அருமையான கிருமி நாசினி.தோலுக்கு நல்லது செய்யும் குணம் நிறைய மஞ்சளில் உள்ளது. வீக்கம் பட்ட இடத்தில் மஞ்சள் தூளை கொதிக்க வைத்து பூச வீக்கம் காணாமல் போகும். எருக்கம் பாலில் மஞ்சளை உரைத்து கட்டியின் உச்சியில் மட்டும் தடவி வந்தால் கட்டி தானே அமுங்கி விடும்.காலை,மாலை இரு வேளை தடவி வரவும். மஞ்சளை சீவி தோலை மட்டும் எடுத்துப்பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட சருமம் தளதளவென பளபளப்பாகும்.முதுமையின் தோற்றம் மறையும். மஞசள்சேர்த்து சமைத்தால் புற்று நோயை உண்டாக்கும் கூறுகளை விரட்டலாம்.