
டெங்கு, மலேரியாவை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது: ராதாகிருஷ்ணன்.
டெங்கு மற்றும் மலேரியாவை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொற்று நோய் பரவாமல் இருக்க நோய் தடுப்பு முகாம்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுடன் இணைந்து தனியார் மருத்துவமனை சார்பில் நோய் தடுப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.